உலகில் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள் மற்றும் அவர்களின் தோன்றல்கள் தொடர்பில் தற்போதும் ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன.
இவ்வாறிருக்கையில் இந்தோனேசியாவில் வாழ்ந்த Hobbits என்று அழைக்கப்படும் மனிதர்களைப் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது நாம் எண்ணுவது போன்று அல்லாமல் ஏனைய மனிதர்கள் தோன்றுவதற்கும் பல வருடங்கள் முன்னர் வாழ்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க பிராந்தியத்தில் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஆதிகால மனிதர்களை ஒத்த மனித இனம் ஒன்று வாழ்ந்துள்ளதாகவும், எனினும் அவர்கள் Homo erectus இனத்தைச் சார்ந்தவர்கள் அல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் சுமார் 11 மனித இனங்களைச் சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட எலும்புகளின் இயல்புகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.