சிறுநீர் கழிக்கும் போது, எரிச்சல், கடுப்பு, அல்லது சிறுநீர் வெளியேற்ற முடியாமல் ஒருவித அசௌகரியத்தை உணர்ந்தால், அது சிறுநீர்ப் பதையில் அல்லது சிறுநீர்ப் பையில் பாக்டீரியா தொற்றுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமாகும்.
எனவே இது போன்ற சிறுநீர் தொற்று பிரச்சனைகளை தடுக்க வீட்டிலேயே அற்புதமான தீர்வுகளைக் காணலாம்.
மோர்
மோர் சிறந்த புரோபயாடிக் உணவு. அதில் பாஸ்பரஸ், கால்சியம், ரைபோஃப்ளேவின், ஆகியவை நிறைந்துள்ளது.
எனவே தினமும் மோரை உணவில் சேர்த்துக் கொண்டால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சிறுநீர் குழாயில் அல்லது பாதையில் ஏற்பட்ட தொற்றுக்களை அழிக்க உதவுகிறது.
ஆப்பிள் சீடர் வினிகர்
சிறுநீர் தொற்றிற்கு ஆப்பிள் சீடர் வினிகர் மிகச் சிறந்த மருந்து ஆகும். ஏனெனில் இது கிருமிகளுக்கு எதிராக செயல்புரிந்து, உடலுக்கு வலிமையும் தருகிறது.
எனவே ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், சிறுநீர் தொற்று விரைவில் குணமாகும்.
கேரட்
கேரட் சிறுநீர் குழாயில் உண்டாகும் பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்ற உதவுகிறது. கேரட்டில் உள்ள விட்டமின் A தொற்றினால் ஏற்படும் வலியைக் குறைத்து, எரிச்சல் ஏற்படாமல் தடுக்கிறது.
இஞ்சி
இஞ்சி சிறுநீர் குழாயில் தங்கும் பாக்டீரியாக்களை அழிப்பதோடு, நச்சுக்களையும் அகற்றுகிறது. எனவே இஞ்சியை தேநீரில் கலந்து குடிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் இஞ்சியைத் தட்டி கொதிக்க வைத்து குடித்தாலும் நல்ல பலனைக் காணலாம்.
வெந்தயம்
வெந்தயம் அமில காரத் தன்மையை சமன் செய்யும். மேலும் வெந்தயம் உடலில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்றி, சிறுநீர் தொற்றிலிருந்து பாதுகாத்து, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்க உதவுகிறது.
குறிப்பு
தினமும் நமது உடலிற்கு போதுமான அளவு நீர் குடிப்பது மிகவும் அவசியமாகும். இதனால் சிறுநீர் தொற்றுக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.