Loading...
மகாலட்சுமி எங்கு வசிக்கிறாளோ அங்குதான் செல்வம் கொழிக்கும், அவள் இல்லாத இடங்களில் தரித்திரம் தான் இருக்கும்.
வீடு பெரிதாக இருந்தாலும் லட்சுமி கடாட்சம் இருந்தால் மட்டுமே வீடு தெய்வ கடாட்சத்துடன் இருக்கும்.
புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்வினை, நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, இளமை, துணிவு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்ற 16 பேறுகளை குறிப்பது லக்ஷ்மி கடாக்ஷம்.
Loading...
- தன்னம்பிக்கையற்றவர்கள்.
- கடமையைச் செய்யாதவர்கள்.
- குலதர்மம் தவறியவர்கள்.
- செய்ந்நன்றி மறந்தவர்கள்.
- புலனடக்கம் இல்லாதவர்கள்.
- பொறாமை கொண்டவர்கள்
- பேராசை கொண்டவர்கள்.
- கோபம் கொள்பவர்கள்
- சான்றோரை மதிக்காதவர்கள்.
- பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள்.
- குரு நிந்தனை செய்பவர்கள்.
- கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள்.
- இறைச்சி உண்பவர்கள்.
- விருந்தினரை உபசரிக்காதவர்கள்.
- பொய் பேசுபவர்கள்.
- உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள்.
- பிறர்மனை விரும்புகிறவர்கள்.
- மனத்துணிவு அற்றவர்கள்.
- அகத் தூய்மை அற்றவர்கள்.
- புறத்தூய்மை அற்றவர்கள்.
- கொடுஞ்சொல் பேசுகிறவர்கள்.
- ஆணவம் கொண்டவர்கள்.
- சோம்பேறியாய் இருப்பவர்கள்.
- அழுக்கு ஆடை அணிபவர்கள்.
- பகலில் உறங்குபவர்கள்.
இந்த செயல்களை செய்பவர்களை விட்டு மகாலட்சுமி விலகிவிடுகிறாள். லட்சுமி கடாட்சம் கிடைப்பதில்லை.
சிலர் இத்தகைய செயல்களை செய்து கொண்டு ஒருவன் செல்வந்தனாக இருந்தால் அது பிராரப்த கர்மாக்களில் ஒன்றாகும்.
Loading...