Loading...
சளித் தொல்லையில் இருந்து எளிதில் விடுபட இயற்கையில் உள்ள அற்புதமான வழிகள் இதோ!
Loading...
சளித் தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
- சளியை உடலில் இருந்து உடனடியாக வெளியேற்ற இஞ்சி டீ, மஞ்சள் பால் அல்லது சுடுநீர் போன்ற பானங்களை குடிக்கலாம். மேலும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை கொண்டு தினமும் இரண்டு வேளை கொப்பளிக்க வேண்டும்.
- கண்களுக்கு கீழே கன்னப் பகுதியில் சுடுநீரில் நனைத்த துணியால் தினமும் பலமுறை ஒத்தடம் கொடுத்தால், சளித் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- வெங்காய சாற்றில் தேன் கலந்து தினமும் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால், தீராத சளியில் இருந்து விரைவில் விடுபடலாம்.
- சளியினால் ஏற்படும் மூக்கடைப்பு பிரச்சனையை போக்க சுடுநீரில் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் சளி வெளியேறி, மூக்கடைப்பில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- முள்ளங்கியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், விட்டமின்களும், ஆன்டி-செப்டிக் பண்புகளும் ஏராளமாக உள்ளது. எனவே சளிப் பிடித்தவர்கள் முள்ளங்கியை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
Loading...