Loading...
மருந்தகம் ஒன்றில், விலங்குகளுக்கு வழங்கும் மருந்தை நோயாளி ஒருவருக்கு வழங்கிய சம்பவமொன்று கம்பஹா – ஹஸ்கிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் தமது கையில் ஏற்பட்ட நோய்த் தாக்கம் ஒன்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுக்கொண்டதன் பின்னர், கம்பஹா பிரதேசத்தில் உள்ள மருந்தகம் ஒன்றுக்கு சென்று, மருந்துகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த மருந்துகளை அருந்துவதற்கு முன்னர் சந்தேகத்தின் பேரில் ஆராய்ந்தபோது, விலங்குகளுக்கு வழங்கும் மருந்துகள் தமது தாயாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவரின் மகன் தெரிவித்துள்ளார்.
குறித்த மருந்தகத்தில், விலங்குகொன்றுக்கு எடுக்கப்பட்ட மருந்துகள் தமது தாயாருக்கு மாற்றி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கம்பஹா மாவட்ட சுகாதார பணிமனையில் இன்று முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...