முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரத்துங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் கண்டி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்களின் விருப்பத்திற்கமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தின பேரணி அரசியல் நோக்கத்திற்காக மாத்திரம் மேற்கொள்ளப்படும் ஒன்றாகும். தொழிலாளர்களுக்காக நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் முன்னாள் தலைவர், யுத்தத்திற்கு தலைமை வழங்கிய கட்டளை தளபதி என மஹிந்த ராஜபக்சவுக்கு கட்சியில் பலத்த வரவேற்பு உள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவராக சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளமை குறிப்பிடத்தக்கது.