கவலைகள் பறந்தோடும் நாள். காலை நேரத்திலேயே பயணம் வந்து சேரும். உதிரி வருமானங்கள் பெருகும். நாளை சந்திக்க நினைத்த ஒருவரை இன்றே திடீரென சந்திக்கும் அமைப்பு உருவாகும்.
புதிய வாய்ப்புகள் வந்து சேரும் நாள். சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக அமையலாம். தொழில் சம்பந்தப்பட்ட வகையில் முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
சஞ்சலங்கள் அகன்று சந்தோஷம் கூடி வரும் நாள். காணாமல் போன பொருளொன்று கைக்கு கிடைக்கலாம். முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.
வரவும் செலவும் சமமாகும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் சிறு தடைகள் ஏற்படலாம். அடுத்தவர்களுக்காக பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. மாலையில் விரக்திகள் விலகும்.
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். வந்த வரன்கள் திரும்பிச் செல்லலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும். உறவினர்களின் பகை உருவாகும். தொழில் தொடர்பாக அலைச்சல்களை மேற்கொள்ள நேரிடும்.
கொடுக்கல் வாங்கல்களை சமாளிக்கும் நாள். மாற்று மருத்துவத்தால் தேக ஆரோக்கியத்தைச் சீராக்கிக் கொள்வது நல்லது. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடம் வந்து சேரும்.
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பொருள் சேர்க்கை ஏற்படலாம்.
செய்தொழிலில் சீரான வளர்ச்சி காணும் நாள். திடீர் வரவு உண்டு. தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். பெற்றோர்களால் பெருமைகள் ஏற்படும். திருமண பேச்சுகள் முடிவாகலாம்.
வாரிசுகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.
நாவன்மையால் நல்ல பெயர் கிட்டும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். எண்ணம் மேலோங்கும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். கனிவான பேச்சுகளால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
மாற்றங்களால் ஏற்றம் பெறும் நாள். அழகான பொருளொன்றை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.