Loading...
விஜய் ஆர்.ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் ஆகியோர் இயக்கத்தில் யுவன்–ஸ்ராவியா ஜோடியாக நடித்துள்ள ‘விளையாட்டு ஆரம்பம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கலந்துகொண்டு பேசியதாவது:–
‘‘திருட்டு வி.சி.டி.க்களால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது அதனை கேமரா வைத்து படம்பிடித்து திருட்டு வி.சி.டி தயாரிக்கிறார்கள். இதனை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு முக்கிய முடிவு எடுத்து இருக்கிறது.
திரையரங்குகளில் கேமராவில் படம்பிடிப்பவர்களை கையும் களவுமாக பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை பிடித்து திரையரங்கு நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்து போலீசில் வழக்குப்பதிவு செய்ய உதவுபவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்த நடவடிக்கையால் திருட்டு வி.சி.டி. தயாரிப்பு கட்டுப்படுத்தப்படும்.’’
இவ்வாறு விஷால் பேசினார்.
டைரக்டர்கள் பாலா, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஷக்தி சிதம்பரம், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, தேனப்பன், கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Loading...