திறமையானவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குமாறு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் அமைப்பாளர் நியமனத்துக்குப் பொறுப்பான குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கட்சியை பலப்படுத்தி, கட்சி உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டிய சகல வசதிகளையும் செய்துகொடுத்து எதிர்வரும் தேர்தலை வெற்றிகொள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் பிரதமர் அக்குழுவினை வலியுறுத்தியுள்ளார்.
இதனடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியில் தேசிய ரீதியில் 116 தொகுதி அமைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் அடுத்துவரும் நாட்களில் தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே தினத்துக்கு முன்னர் சகல தொகுதி அமைப்பாளர்களும் நியமிக்கப்படவுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.