இப்போது அரசு எம்மை கண்டு பயப்பட ஆரம்பித்து விட்டது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்று மொரட்டுவையில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
ஆரம்பத்தில் காலி முகத்திடலை மே முதலாம் திகதி எமக்கு தருவதாக அரசு தரப்பு ஒப்புதல் அளித்தது.
ஆனாலும் இப்போது பொது மக்கள் ஆதரவு எமக்கு அதிகரித்து விட்டதை அறிந்து கொண்டதால் மீண்டும் பின்னோக்கி செயற்படப் பார்க்கின்றார்கள்.
எமது மே முதலாம் திகதி கூட்டத்தினை தடுக்கப் பார்க்க முயற்சி செய்கின்றார்கள். ஆனால் அது முடியாது இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக புதுப் புரட்சி ஒன்று ஏற்படுத்தப்படும்.
எமது மே தினக் கூட்டத்தோடு அரசுக்கு எதிரான மக்கள் ஒன்று திரளுவார்கள். மே 2ஆம் திகதி முதல் ஆட்சியை கவிழ்ப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்.
வரலாற்றில் எப்போதும் ஒன்று திரளாத கூட்டத்தினை கொண்டு வந்து எமது பலத்தினை அரசிற்கு காட்டுவோம். எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.