புற்றுநோய் தாக்கத்தால் பல்வேறு வேதனைகளை அனுபவித்து வரும் சிறுவன் தன் தாயிடம் உருக்கமாக பேசியுள்ளான்.
பிரித்தானியாவின் Huddersfield நகரை சேர்ந்தவர் Ewa, இவரின் மகன் Cristiano (8).
Cristianoவுக்கு கடந்தாண்டு ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, மருத்துவர்களிடம் சென்று அவனை காட்டிய போது அவனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
பின்னர் Cristianoவுக்கு அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு பின்னரும், புற்றுநோயின் தாக்கம் அவனுக்கு அதிகமாகி வருகிறது. Cristianoவுக்கு சமீபத்தில் அளிக்கப்பட்ட ரேடியோ தெரபி சிகிச்சையின் போது அவன் முகம், தொண்டை, வாய் பகுதிகள், கன்னம் போன்ற பகுதிகள் வெந்து போனது.
இதுகுறித்து Cristianoவின் தாய் Ewa கூறுகையில், என் மகனுக்கு நடந்த சிகிச்சையில் அவன் முகம் வெந்து அவன் வலியால் துடித்தான்.
அப்போது அவன் என்னிடம், அம்மா நான் இனியும் வாழ விரும்பவில்லை என கூறினான் என சோகத்துடன் கூறியுள்ளார்.
மேலும், Cristianoன் ஒரு கண்களை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக சிகிச்சைக்கு £200,000 செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், தன் மகனை காப்பாற்றுமாறு பொது மக்களிடம் Ewa நன்கொடை கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.