கடந்த காலங்களை விட இந்தியா தற்போது பாரிய பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடி தலைமையிலான 3வது நிதி ஆயக் கூட்டம் டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “பாரிய பொருளாதார வளர்ச்சியை தற்போது இந்தியா எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் வெகுவாக மேம்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டை விட தற்போது மாநிலங்களுக்கு, மத்திய அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டின் அளவு 40% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே தான் ஜி.எஸ்.டி வரிவிதிப்பை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமுலுக்கு வரும்போது, நாடு முழுவதும் அனைத்துவிதமான தொழில்களுக்கும், ஏறக்குறைய சரிசமமான வரி விதிக்கப்படும். அத்துடன், தொழில்துறையிலும் புதிய மாற்றம் ஏற்படும்.
பொருளாதார வளர்ச்சி மிக விரைவாக மாற்றமடைவதோடு, இந்த பொருளாதார மாற்றம், இந்திய வரலாற்றில் முக்கியமான மைல்கல் இருக்கும்” என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.