பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். அவருடன் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் செல்லவுள்ளார். மேலும் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழு ஒன்றும் செல்ல உள்ளது.
இந்த விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்திய மத்திய அரசின் அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியையும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அமைச்சர்களும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டி உள்ளிட்டோரும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.