குடும்பச் சுமை கூடும் நாள். இடமாற்றம், செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விரும்பிய பொருட்களை வாங்க, அதிக அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.
முன்னேற்றம் காண முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் நாள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டை அலங்கரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். விழாக்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும் நாள். பரம்பரைச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். கைவிட்டுப் போனதாக நினைத்த வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.
எதிர்மறைச் சிந்தனை மேலோங்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.
உறவினர்களால் உற்சாகம் பெருகும் நாள். திருமண முயற்சிகள் கைகூடிவருதற்கான அறிகுறி தோன்றும். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும். மனக்குழப்பம் ஏற்பட்டு அகலும்.
போட்டிகளைச் சமாளித்து புகழ்காணும் நாள். பொது வாழ்வில் பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். தேக ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். கட்டிடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
இழுபறியான காரியங்கள் இனிதே முடியும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
அந்தஸ்து உயரும் நாள். லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். சேமிப்பில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். வரவு வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உருவாகும். உத்தியோகத்தில் மாற்றம் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்ளவும்.