இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. கொலம்பியா விண்கலத்தில் 7 பேர் கொண்ட குழுவுடன் விண்வெளிக்கு பயணித்த கல்பனா சாவ்லா அங்கு 31 நாட்கள், 14 மணிநேரம், 54 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். பின்னர் தனது ஆராய்ச்சிகளை முடித்த பின்னர் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் கடந்த 2003ம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பாலிவுட் இயக்குநர் பிரியா மிஷ்ரா படமாக எடுக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கான கதையையும் எழுதி முடித்துள்ளார். இதுகுறித்து பிரியா மிஷ்ரா கூறும்போது,
கடந்த ஏழு வருடங்களாக கல்பனா சாவ்லாவின் வாழ்க்கையை பற்றிய கதையை எடுக்க முய்றசி செய்து வருகிறேன். தற்போது தான் அதற்கான நேரம் வந்துள்ளது. இப்படத்தை உலக தரத்தில் பிரம்மாண்டமாக எடுக்க உள்ளதாக கூறினார். மேலும் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கல்பனா சாவ்லா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாகவும் கூறினார். இதற்கு முன்னதாக பிரியங்கா, பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான `மேரி கோம்’ வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மேரி கோமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரியங்கா நடிப்பில் ஹாலிவுட்டில் தயாராகி உள்ள `பே வாட்ச்’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.