Loading...
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து 7 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை உடலுக்குள் மறைத்து இலங்கைக்கு கொண்டு வர முயற்சி செய்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை இன்று அதிகாலை 12.45 மணியளவில் கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
மேலும், இவரிடம் இருந்து 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான 708 கிராம் போதைப் பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடையவர் என்றும், பாகிஸ்தானில் வாகன ஓட்டுனராக பணிபுரிபவர் என்றும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Loading...