குல தெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் தெரியுமா?
இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின் மேல் ஈடுபாடு என்று பாருங்கள். அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம். சதுரகிரி அருகில் இருப்பவர்கள்- மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம்.
பொதுவாக திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக ஏற்று வணங்கலாம். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோவிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது. மேலும், திருச்செந்தூர் சம்ஹார தலமாகவும் விளங்குகிறது.
எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம், ஆகியவற்றையும் அழிக்கக் கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது. இது போன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று வருவதுடன் திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம்.
திருச்செந்தூர்- குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய தலமாக விளங்குவதால் குலதெய்வத்துக்கு உரிய கோவிலாக கருதப்படுகிறது. இது ஒரு கால ரகசிய நுட்பம். பக்தர்கள் அனைவரும், இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வில் ஏற்படும் அத்தனை தடங்கல்களையும் தாண்டி, நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை அமைய திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக வணங்குவோம்.