கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதில் முதன்மையானவர். சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரால் அங்குள்ள மக்கள் அகதிகளாக வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அகதிகள் குடியேற தடை விதித்தார். அப்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ எங்க நாட்டிற்கு வாருங்கள் என சிரியா அகதிகளுக்கு அன்போடு அழைப்பு விடுத்தார்.
ஜஸ்டின் ட்ரூட்டோ எப்போதுமே விவசாயத்திற்கு முன்னுரிமையும், ஆதரவும் அளிப்பவர். இவர் தற்போது கனடா நாட்டில் உள்ள பால் உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக சில முடிவுகளை எடுத்துள்ளார். இவரது முடிவால் அமெரிக்கா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இத்தனை நாட்களாக அமெரிக்காவின் விஸ்கான்சின், நியூயார்க் ஆகிய இடங்களில் இருந்து கனடாவிற்கு அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இதனால் கனடா பால் உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு புதிய கொள்கையை உருவாக்கியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூட்டோவின் அதிரடி நடவடிக்கையால் கனடா பால் விவசாயிகள் நன்மை அடைந்துள்ளனர். அதே சமயம் அமெரிக்காவின் ஏற்றுமதியில் இடி விழுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அமெரிக்கா அதிபர் டொனால் டிரம்ப் கனடா தங்களை அவமானப்படுத்தி விட்டது என குற்றம்சாட்டியுள்ளார்.
டிரம்பின் குற்றச்சாட்டிற்கு அமைதியாக பதில் அளித்துள்ள கனடா பிரதமர் என் விவசாயிகளின் நலனிற்கு நான் தொடர்ந்து பாடுபடுவேன், அதே நேரம் அண்டை நாட்டுடன் மரியாதையான, முறையான அணுகுமுறையை கையாளுவேன் எனவும் கூறியுள்ளார்.