தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதனின் வாழ்க்கை முறை மாறினாலும், இந்த உலகம் நவீனமயமாக்கப்பட்டாலும் ஆங்காங்கே சில பகுதிகளில் விசித்திரமான மூட நம்பிக்கைவாதிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதற்கு உதாரணம் தான் தற்போது கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம்.
கர்நாடக மாநிலத்தில் நடப்பு ஆண்டில் கடும் வறட்சி நிலவி வருவதால், சிக்கமகளூரு தாலுகாவில் உள்ள பிள்ளேனஹள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள 4 கிராம மக்களும் மழை வேண்டி நூதன வழிபாடு நடத்த முடிவெடுத்தனர்.
அதாவது , இறந்த ஒருவரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதில் இருக்கும் முடியையும் பற்களையும் தீவைத்து கொளுத்தி மழைக்காக வருண பகவானை வேண்டி சிறப்பு பூஜை செய்து வழிபட திட்டமிட்டனர்.
இதுகுறித்த, தகவல் 4 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கும் தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 4 கிராம மக்களும் மயானத்திற்கு ஊர்வலமாக சென்று புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுத்து, அதில் இருந்த பற்கள் மற்றும் முடிகளை தீவைத்து எரித்துள்ளனர். இவ்வாறு செய்வதால் மழை வரும் என்பது இவர்களின் நம்பிக்கை.