வவுனியாவில் நேற்று இரவு வெட்டுக்காயத்திற்கு இலக்காகிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது 52 வயதான முத்துராசா உதயசேகர் என்ற மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த நபரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்தில் காயமடைந்தவர் நேற்று இரவு மகாறம்பைக்குளம் பகுதியில் தனக்கு பணம் கொடுக்க வேண்டியவர் ஒருவரிடம் சென்று தனது பணத்தினைக் கேட்டுள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பணம் கொடுக்கவேண்டிய நபரும் அவரது மகனும் சேர்ந்து பணத்தினை மீளப்பெற்றுக் கொள்ள வந்தவர் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தாக்கிய நபரும் அவரது மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.