Loading...
பூஜை அறையில் தீபம் ஏற்றி கடவுளை வணங்குகிறோம். ஆனால் அப்படி ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
Loading...
தீபம் ஏற்றும் திசையின் பலன்கள்
- தீபம் ஏற்றும் போது, கிழக்குத் திசையில் ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன், மக்களிடையே நல்ல மதிப்பும் கிடைக்கும்.
- மேற்குத் திசையில் தீபம் ஏற்றினால், சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். வீட்டில் உள்ள கடன் தொல்லைகள் விலகும்.
- வடக்கு திசையில் நோக்கி தீபம் ஏற்றினால் சர்வ மங்களம் கிடைப்பதுடன், செல்வம் பெருகும்.
திரிகளின் வகைகள் மற்றும் அதன் பலன்கள்
- பஞ்சுத் திரி – பஞ்சுத் திரியில் தீபம் ஏற்றினால், வாழ்க்கையின் சுபம் கூடும்.
- தாமரைத்தண்டு திரி – தாமரைத் தண்டு திரியில் தீபம் ஏற்றினால், முன் பிறவியின் பாவங்கள் அகன்று, செல்வம் கிட்டும்.
- வாழைத்தண்டு திரி – வாழத்தண்டு திரியில் தீபம் ஏற்றினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- வெள்ளெருக்கு பட்டை திரி – வெள்ளெருக்கு பட்டை திரியில் தீபம் ஏற்றினால், செய்வினைகள் நீங்கி, ஆயுள் நீடிக்கும்.
குறிப்பு
தென் திசையில் மட்டும் ஒருபோதும் தீபம் ஏற்றக் கூடாது. ஏனெனில் அதனால் எதிர்பாராத தொல்லைகளும், கடன்கள் மற்றும் பாவங்கள் ஏற்படும்.
Loading...