மட்டக்களப்பு – காரைதீவு பகுதியில் மனைவியைத் தீ வைத்து கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கணவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் இன்று உத்தரவிட்டுள்ளார்.
திருமணம் முடித்து மூன்று மாதங்களே கடந்த நிலையில் குறித்த பெண் தீவைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
இதில் காரைதீவு, வெட்டுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மொறிஸ் மெரினா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் முடித்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.