மேற்பூச்சு மருந்து
பூண்டு சாறு -முப்பது மில்லி
நவச்சாரம் -பத்து கிராம்
வெள்ளைப் பூண்டை தோல் உரித்து தண்ணீர் விடாமல் பூண்டை மட்டும் இடித்து சாறாகப் பிழிந்து முப்பது மில்லி சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நவச்சாரம் பத்துகிராம் நன்கு இடித்துப் பொடியாக்கி கலந்தால் பசை போல் கிடைக்கும் இந்தப் பசையை வெண்புள்ளிகள் மீது மேற்பூச்சாகப் போட்டு வர வெண்குஷ்டம் நோய் சரியாகும்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அருகன் தைலம் வாங்கி அதைக் காலையில் பூசி காலை வெயிலில் காலை ஆறு மணி முதல் ஆறரை மணி வரை நின்று வெண்புள்ளிகள் இருக்கும் இடங்கள் மீது வெயில் படுமாறு தினமும் நின்று வர வேண்டும்.
உள்ளுக்கு சாப்பிடும் மருந்து
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சிவனார் வேம்பு பொடி வாங்கி வந்து ஐந்து கிராம் காலை மாலை உள்ளுக்கு சாப்பிட்டு வர வேண்டும்.
காட்டு சீரகம் – அரை தேக்கரண்டி (ஸ்பூன் )
கருப்பு எள் -ஒரு தேக்கரண்டி (ஸ்பூன் )
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் காட்டு சீரகம் வாங்கிப் பொடி செய்து கொண்டு அத்துடன் எள்ளு பொடி செய்து வைத்துக் கொண்டு மேற் கூறிய அளவுப் படி எடுத்து கலந்து தீநீராக்கிப் பனை வெல்லம் சேர்த்து தினமும் குடித்து வர ஒரு மண்டலத்தில் அதாவது நாற்பத்தி எட்டு நாட்களில் பரிபூரண குணம் அடையலாம்.