Loading...
நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள், ஜே.வி.பி. போன்ற இயக்கங்களைப் போன்று சில சந்தர்ப்பங்களில் அரசாங்கமும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இவ்வாறு பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டதனால் நாடு பின்னோக்கி நகர்ந்தது.
நாட்டில் நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் புலிகள், ஜே.வி.பி. ஆகியனவற்றின் பயங்கரவாத செயற்பாடுகள் காணப்பட்டன.
இதனால் நாடு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைவை எதிர்நோக்க நேரிட்டது என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
Loading...