Loading...
நகரின் மையப்பகுதியில் பெண் ஒருவர் பாரந்தூக்கி ஒன்றிற்குள் ஏறி சிக்கிக்கொண்ட சம்பவம் அதிகாலை 4-மணியளவில் இடம்பெற்றது.
வெல்லஸ்லி மற்றும் சேர்ச் வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சிக்கி கொண்டுள்ள பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் அதிகாரிகள் முனைந்துள்ளனர்.
பாரந்தூக்கியின் உச்சத்திற்கு ஏறிய பெண் பின்னர் கேபிள் ஒன்றின் மூலம் கீழே வரும்போது அதன் கொக்கிக்குள் அகப்பட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர பணிக்குழுவினரும் ரொறொன்ரோ தீயணைப்பு பிரிவினரும் பெண்ணை மீட்கும் முயற்சியில் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
இம்முயற்சி மிக கடுமையான தெனவும் நிதானமாக செய்ய வேண்டியதெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...
Loading...