Loading...
கிராம சேவையாளர் பதவிக்கான 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக அரச முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கிராம சேவையாளர்களுக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் குறித்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
Loading...
எனினும் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு, குத்தகை ரீதியில் கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விரைவில் நாடளாவிய ரீதியில் காணப்படும் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடங்களுக்கு தகுந்த நபர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...