Loading...
உண்மை, நீதி தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர் பாப்லோ டி கிரீப், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
பாப்லோ டி கிரீப், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி வருகைதரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் 13 நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவுள்ளார் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்காக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Loading...
2012ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி உண்மை, நீதி தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணராக பாப்லோ டி கிரீப் நியமனம் பெற்றார்.
இலங்கை விஜயத்தின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதித் துறை தொடர்பான நல்லிணக்க செயல்முறைகள், வன்முறைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளவுள்ளார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Loading...