சிங்கள தமிழ் பிள்ளைகள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்க வேண்டியது அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது போர் வெற்றிக்கொள்ளப்பட்ட போதும் சமாதானம் கிடைக்கவில்லை எனவே போர் வெற்றிக்கொள்ளப்பட்ட பின்னர் உண்மை சமாதானம் அடையப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற இடங்களில் உள்ள சிங்கள பிள்ளைகள் ஒருபோதும் தமிழில் பேசியதில்லை.
அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பிள்ளைகள், சிங்கள பிள்ளைகளுடன் பேசியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் பாடசாலை மட்டத்தில் ஒவ்வொரு சமயம் பற்றியும் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என சந்திரிக்கா குமாரதுங்க யோசனை முன்வைத்துள்ளார்.