பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் தான், அதிலும் பாம்பு கடித்துவிட்டால் பயத்திலேயே சிலருக்கு உயிரே போய்விடும்.
பாம்பு கடித்தவுடன் பதட்டத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் யோசிப்பதில்லை.
பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டியவை
பாம்பு கடித்தவுடன் அந்த இடத்திற்கு மேலாக லேசாக கட்ட வேண்டும். இறுக்கி கட்டிவிட்டால் அந்த இடத்தில் விஷம் நின்று அந்த இடம் அழுகுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கடிப்பட்டவர் பதட்டமடையாமல் இருக்கவேண்டும். பதட்டமடையும் போது இரத்த ஓட்டம் அதிகமாகி விஷம் எளிதில் உடல் முழுதும் பரவிவிடும்.
கடிபட்டவரை நடக்கவிடக்கூடாது. உடல் குலுங்கும்படி தூக்கக்கூடாது. மெதுவாக தான் கையாள வேண்டும்.
பாம்பு கடித்த இடத்தில் இருந்து உயரமான இடத்தில் இதயம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் போது படுக்க வைத்தே அழைத்து செல்லவேண்டும்.
பாம்பு கடிக்கு அரசு மருத்துவமனையே சிறந்தது. சிகிச்சை அளிப்பதற்கு அது எவ்வித பாம்பு என தெரிந்தால் எளிதாக இருக்கும். பெயர் தெரியாவிட்டாலும் அதன் நீளம், நிறம் ஆகியவற்றை கூறலாம்.
வரிசையாக பல பற்களின் தடம் தெரிந்தால் அது விஷபாம்பாக இருக்க வாய்ப்பில்லை. ஒரே ஒரு பல் தடமோ அல்லது இரண்டோ பதிந்திருந்தால் கட்டாயம் அது விஷ பாம்பு தான்.
ஒரு பல் தடம் பதிந்து இருந்தால் விஷம் அதிக ஏறி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. எனினும் கட்டாயம் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
விஷ முறிவிற்கு வாழைச்சாறினை கொடுக்கலாம். அல்லது மஞ்சளை தீயில் காட்டி எரிந்து கொண்டு இருக்கு மஞ்சளை அப்படி பாம்பு கடித்த இடத்தில் வைத்து கட்டலாம்.
இரத்தம் வெளியே வந்தால் விட்டுவிடவும். விஷம் ஏறிய இரத்தம் தான் முதலில் வரும். நல்ல பாம்பு கடித்தால் இரத்தம் வேகமாக் உறையும். கண் சுருங்கும். பேச்சு குழறும். கட்டு விரியன் கடித்தால் வலி அதிகமாக இருக்கும். வயிறு வலிக்கும்.
செய்யக்கூடாதவை
வாயால் விஷத்தை எடுக்கக்கூடாது. இதனால் இன்னொருவருக்கு விஷமானது கடத்தப்படும். மேலும் பாக்டீரியாக்கள் விஷத்தின் வீரியத்தினை அதிகரிக்க செய்யும்.
காயத்தை வெட்டி பெரிதாக்க கூடாது. ஐஸ் கட்டி போன்ற குளிர்ந்த பொருள்களை காயத்தின் மீது வைக்கக்கூடாது.