உத்திரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் சட்ட விரோதமாக செயல்படும் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டார். இதனால் அங்கு இறைச்சி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதே போல் மாட்டு இறைச்சிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
அசைவ உணவு பரிமாற்றத்தால் மணமகன் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் குலேபி கிராமத்தை சேர்ந்தவர் ரிஸ்வான். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நக்மா என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தில் அசைவ உணவு வைக்கப்படவில்லை. இறைச்சி தட்டுப்பாடு காரணமாக விருந்தில் கறி இல்லை.
இதனால் மணமகன் வீட்டார் அதிருப்தி அடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இறைச்சி தட்டுப்பாடு காரணமாக அசைவ உணவு பரிமாற இயலாத சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. இதை ஏற்காமல் மணமகன் குடும்பத்தினர் திருமணத்தை ரத்து செய்தனர். மனமகள் நம்கா திருமணத்திற்கு வந்து இருந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்
இந்த நிலையில் திருமண விருந்தில் மாட்டு இறைச்சி இல்லாததால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் அருகே உள்ள சாந்திபூர் கிராமத்தை சேர்ந்தவர் ரேஷ்மா ஜகான் இவருக்கும் பிலாரி பகுதியை சேர்ந்த வாசித் உசேன் என்பவருக்கும் வருகிற 5-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்த திருமண விருந்தில் மாட்டு இறைச்சி இருக்க வேண்டும் என்று மணமகன் தெரிவித்து இருந்துள்ளார். ஆனால் பெண் வீட்டார் இதை ஏற்க மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து இந்த திருமணத்தை மணமகன் ரத்து செய்து விட்டார்.
இது குறித்து ரேஷ்மா ஜகான் குடும்பத்தினர் கண்ட்ரேசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.போலீசார் வாசித் உசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களை நேரில் வர வழைத்து போலீசார் விசாரணை செய்தனர்.