இனிமேலும் மீதாட்ட முல்ல குப்பை மேடு பிரச்சினைக்கு தீர்வுகள் எடுக்கப்படாவிட்டால் உயிரிழப்புகள் தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும்,
குப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கப்படவில்லை என மகிந்த ஆட்சியை குறைகூறிக்கொண்டு இருக்கின்றீர்கள். அதேபோல் கோத்தபாய மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
ஆனாலும் அவற்றை விட்டு விட்டு இப்போது தீர்வு பெற்றுக்கொள்ளப்பட வேண்டியது மிக அவசியமாகும்.
32 உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு விட்டன அவை சாதாரணமா? இந்தப் பிரச்சினை தொடருமானால் மேலும் உயிரிழப்புகள் தொடரக்கூடும்.
இந்த குப்பைமேட்டினை வைத்து சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றார்கள். மில்லியன் கணக்கான பணம் கொட்டுகின்றது.
இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படுவதோடு முறையான தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.