Loading...
கியூபா நாட்டுடன் சில ஆண்டு காலமாக தனது உறவினை அமெரிக்கா துண்டித்து வைத்திருந்தமை தெரிந்ததே.
எனினும் முன்னாள் அதிபர் ஒபாமா மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் உறவு புதுப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கூகுள் நிறுவனம் கியூபா நாட்டினுள் இணைய வலையமைப்பு சேவையினை வழங்க முன்வந்துள்ளது.
Loading...
இதனால் கியூபாவில் இணைய சேவையினை வழங்கும் முதலாவது வெளிநாட்டு நிறுவனம் என்ற அந்தஸ்தினை கூகுள் பெற்றுள்ளது.
இதுவரை உள்நாட்டு இணைய வலையமைப்புக்களை பயன்படுத்தி வந்த கியூபா மக்கள் முதன் முறையாக வேகம் கூடிய இணைய இணைப்பு ஒன்றினைப் பெறவுள்ளனர்.
மேலும் கியூபாவில் Wi-Fi சேவையினையும் வழங்குவதற்கு கூகுள் தீர்மானித்துள்ளது.
Loading...