பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் ஆனது உலகளவில் ஏறத்தாழ 1.8 பில்லியன் பயனர்களை தன்கத்தே கொண்டுள்ளது.
இவர்களில் 1.2 பில்லியன் வரையானவர்கள் பேஸ்புக்கின் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படியிருக்கையில் மெசஞ்சர் லைட் எனும் புதிய அப்பிளிக்கேஷன் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனுது வேகம் குறைந்த இணைய இணைப்பிலும் சிறப்பாக செயல்படுவதுடன், டே்டாவினையும் குறைவாகவே பயன்படுத்துகின்றது.
எனினும் இந்த அப்பிளிக்கேஷன் பல நாடுகளில் இதுவரை பயன்பாட்டில் இருந்திருக்கவில்லை.
இதனைக் கருத்தில் கொண்ட பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் மெசஞ்சர் சேவையினை புதிதாக 150 நாடுகளில் அறிமுகம் செய்யவுள்ளது.
இவற்றுள் Germany, Colombia, Italy, Vietnam, Algeria, Morocco, Nigeria, Peru, Turkey, Japan, Taiwan மற்றும் Netherland ஆகிய நாடுகளும் அடங்கும்.
இதன்பின்னர் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தும் 1.2 பில்லியன் பயனர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.