நடிகர் அஜித்துக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் ஒருவாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளையொட்டி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதில், தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன், சுரேஷ், கலையரசன், விக்ரம் பிரபு, ராகுல்தேவ், நடிகைகள் நயன்தாரா, சிம்ரன், ராதிகா சரத்குமார், ஹன்சிகா, ராய் லட்சுமி, இயக்குனர் அறிவழகன், கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி உள்ளிட்டோரும் அஜித்துக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
அஜித் பிறந்தநாளையொட்டி அவர் நடித்து வரும் ‘விவேகம்’ படக்குழுவினர் அப்படத்தில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இப்படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.