தமிழ்நாட்டிம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பூமியிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் நீலகிரியில் நீத்தி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு சில நாட்களாக பூமிக்கடியிலிருந்து 100 மீட்டர் அகலத்துக்கு புகை வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் தாவரங்கள் முற்றிலும் கருகியுள்ளன.
மேலும், புகை அதிகளவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பரவுவதால் அவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கமும் ஏற்படுகிறது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து புகையை அணைக்க முயன்றனர். ஆனாலும், தொடர்ந்து புகை வெளியேறி வருகிறது.
பல வருடங்களுக்கு முன்னர் பூமியில் புதைந்த மரங்கள் வெப்பம் காரணமாக தீப்பற்றி எரிவதால் புகை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனிடையில், பூமியின் மண்ணை ஆராய்ச்சி செய்த புவியியல் ஆய்வாளர்கள் இதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது எனவும் மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்கள்.