மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் நல்லபடி முடியும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 1,6,7
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,4,7
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆனால், திடீர் செலவுகளால் மன உளைச்சல் ஏற்பட்டு அன்றாடப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடமுடியாது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபர்களிடம் சொல்லவேண்டாம்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 2,3,4,5
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,7,9
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு பணவசதி திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தேவையற்ற செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கில்லை. திருமண முயற்சிகள் பலிதமாகும். தாயாருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 1,3,4,5,6
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,7
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பம் மற்றும் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த வாரம் எடுப்பது சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு வயிற்று பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 1,2,7
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,6,9
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 1,3,4,5,6
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்க நேரும். அந்நியர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. ஒருசிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வழக்குகள் எதுவும் இருந்தால் உங்களுக்குச் சாதகமாக முடியும். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் பாடம்
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 3,4,5,6
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,7
வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிறு அளவில் உடல்நலக் குறைவு ஏற்படலாம். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றலாம். மனதில் அடிக்கடி இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்படலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
வியாபாரம் நல்லபடியே நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலிடு செய்வதற்கான கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 1,2,3,4,5
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,4,7
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும் முயற்சியை இந்த வாரம் மேற்கொள்ளலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 2,3,4,5
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,4,5
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
தனுசு:
தனுசு சிக்காரர்களுக்கு பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவர். தம்பதியர் இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 4,5,6,7
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,9
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு புராதனமான புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடமுடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 1,2,7
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,6,7
வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் கூடுதலான பொறுப்புகள் ஏற்படும் என்பதால், உடல் அசதியும் சோர்வும் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளின் காரணமாக அசதியும் சோர்வும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 2,3,4,5
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,4
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.