பேஸ்புக்கிற்கு அடுத்ததாக சமூக வலைத்தள உலகை ஆக்கிரமித்து நிற்பது டுவிட்டர் ஆகும்.
மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள இத்தளமானது ஆரம்பத்தில் அன்றாக செயற்பாடுகளை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொள்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதன் பின்னர் கடந்த நான்கு வருடங்களாக வீடியோக்களை பகிரும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு முதல் வீடியோக்களை நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியையும் டுவிட்டர் அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது ப்ரீமியம் வீடியோ சேவையையும் அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொழுதுபோக்கு அம்சங்கள், செய்திகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றினை தொகுத்து வழங்கும் 200 வரையான நிறுவனங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்நிறுவனங்களின் வீடியோக்களை கட்டணம் செலுத்தி பார்வையிட முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளே டுவிட்டர் நிறுவனம் இதுவரை 450 நிழ்ச்சிகளை சுமார் 800 மணித்தியாலங்கள் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.
இவற்றினை 45 மில்லியன் பயனர்கள் கண்டுமகிழ்ந்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.