மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் எனப்படும் மூளைக்கான இரத்தப் போக்கு குறைபாடு நோய்களின் உச்ச பாதிப்புக்கும் இரத்த வகைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது O வகை இரத்தத்தினைக் கொண்டிராதவர்கள் அனைவரும் மேற்கண்ட நோய்த்தாக்கங்களின் போது அதிக பாதிப்பை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1.3 மில்லியன் வரையான மக்களை அடிப்படையகக் கொண்டு மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது O அல்லது O- இரத்த வகை அல்லாத A, B, AB ஆகிய இரத்த வகைகளைக் கொண்டிருப்பவர்கள் மாரடைப்பு மற்றும் ஸ்ரோக் ஏற்படும்போது அதிக ஆபத்தை எதிர்நோக்கக்கூடிய நிலமை 9 சதவீதம் அதிகமாக காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இரத்த வகைக்கும் குறித்த நோய்களினால் ஏற்படும் அதிக ஆபத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றி தெளிவான காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதேவேளை 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில் O குருதி வகை அல்லாதவர்கள் இதயம் தொடர்பான நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றமை கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.