அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க கட்சியின் பொதுக்குழுவுக்கு அதிகாரமுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக-வின் பொதுக்குழு கூடி கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது.
இதை எதிர்த்த ஓ.பி.எஸ் தரப்பு அதிமுக சட்ட விதிகளின் படி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும்.
ஆனால் சசிகலா விஷயத்தில், பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்காமல் நியமனம் செய்துள்ளனர்.
இதனால் சசிகலா-வை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளது.
இந்த மனு பரிசீலனையில் இருக்கும் நிலையில் விரைவில் இந்த விடயத்தில் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும் என தெரிகிறது.
இது குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சக்திவேல் கூறுகையில், தேர்தல் ஆணையம் சசிகலா நியமனம் செல்லாது என முடிவெடுத்தால் அவரால் மேற்கொள்ளப்ட்ட அனைத்து நியமங்களும் செல்லாததாகி விடும். அதன்பின்னர் சசிகலா சாதாரண உறுப்பினராகி விடுவார்.
இதுவே, சசிகலா நியமனம் சரி என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் மற்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளை போல சசிகலாவை நேரடியாக நீக்கிவிட முடியாது.
எனவே பொதுச் செயலாளரை நீக்குவது என்றால் அதை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்