மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் உள்ளாடை ஒன்றை உருவாக்கி அபார சாதனை படைத்துள்ளார்.
மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த Julian Rios Cantu(18) என்ற வாலிபர் தான் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஜுலியனின் தாயார் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு மார்பகங்களையும் முழுமையாக நீக்கும் நிலை ஏற்பட்டது.
தனது தாயாருக்கு நேர்ந்தது போல் வேறு ஒரு பெண்ணிற்கு இந்த நோய் தாக்கக்கூடாது என எண்ணிய ஜுலியன் Higia Technologies என்ற நிறுவனத்தை தொடங்கி அதிநவீன உள்ளாடையை தயாரிக்க தொடங்கியுள்ளார்.
பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின்னர் EVA என்ற உள்ளாடையை தயாரித்து சாதனைப்படைத்துள்ளார்.
சுமார் 200 பயோ-சென்சார்கள் வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த உள்ளாடையானது பெண்களின் மார்பகங்களை ஒரே வடிவத்தில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
இதுமட்டுமில்லாமல், மார்பகங்களை சுற்றி உள்ள வெப்பநிலை மற்றும் ரத்த ஓட்டத்தை துல்லியமாக கண்காணித்து அவற்றின் முடிவுகளை கணிணிக்கு அனுப்பி வைக்கும்.
இதன் முடிவில், உள்ளாடையை அணிந்த பெண்ணிற்கு மார்பக புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும்.
மேலும், வாரத்தில் ஒரு மணி நேரம் மட்டும் இதனை அணிந்தால் போதுமானதாகும்.
வாலிபரின் இந்த அபார சாதனைக்கு தற்போது அங்கீகாரமும் கிடைத்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ‘உலகளவில் சிறந்த மாணவ தொழில்முனைவோர்’ என்ற விருதை பெற்றது மட்டுமில்லாமல் ஜுலியனுக்கு 20,000 டொலர் பரிசும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.