புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தக்கல் செய்யப்படவுள்ளது.
இதன்படி வழக்கின் குற்றப்பத்திரிகை மே மாதம் 12ஆம் திகதிக்கு முதல் சட்டமா அதிபரால் யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அரச சட்டவாதி யாழ்.மேல் நீதிமன்றத்தில் இன்று உறுதியளித்துள்ளார்.
வித்தியா படுகொலை வழக்கின் சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடிப்பது தொடர்பில் கட்டளை பிறப்பிப்பதற்காக யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அரச சட்டவாதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியிடம் இவ்வாறு உறுதியளித்தார்.
இதையடுத்து சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்ட யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த உத்தரவை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறும் மேல் நீதிமன்ற பதிவாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.