சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரி பிரச்சினைகள் தொடர்பில் கொள்கையளவில் தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசியமற்ற வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சைட்டம் தொடர்பாக பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று அவசியமற்ற முறையில் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமது அரசியல் தேவைகளுக்காக விலைபோனவர்களுடன் வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபடுவது வருத்தமளிக்கின்றது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.