முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த புனர்வாழ்வு பயிற்சிகளைப் பெறாத பலர் சாதாரண மக்கள் சமூகத்தில் இருக்கும் பின்னணியில் மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் உள்ளூராட்சி ஒன்றியத்தின் பிரதான அமைப்பாளர் குணசிறி ஜயநாத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக சிறப்பு பயிற்சிகளை பெற்ற பாதுகாப்பு படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.
உடனடியாக அவருக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடு்ககாது போனால் கடுமையாக முடிவுகளை எடுக்க நேரிடும் எனவும் குணசிறி ஜயநாத் குறிப்பிட்டுள்ளார்.