Loading...
இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஜிசாட்-9 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-9 ராக்கெட் மூலம் மாலை 4.57 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்நிலையில், ஜிசாட்-9 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி கூறியுள்ளதாவது:-
செயற்கைகோளினை விண்ணில் ஏவுவதற்காக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். ஜிசாட்-9 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க தருணம் ஆகும். இது புதிய எல்லைகளை உருவாக்கியுள்ளது.
இந்த செயற்கைகோள் தெற்கு ஆசிய மற்றும் நம்முடைய நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். நாம் இந்த வெற்றியை நினைத்து பெருமை கொள்வோம்.
தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் ஒருகிணந்து இந்த செயற்கைகோள் ஏவப்பட்டத்தை கொண்டாட வேண்டும். அதிபர் அஷ்ரப் கானி, பிரதமர் ஹசினா, பிரதமர் பிரசண்டா, அதிபர் மைத்ரி பால சிறிசேனா, அதிபர் அப்துல்லா யமீன் மற்றும் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோரை வரவேற்கிறேன். அனைத்து தலைவகளும் என்னுடன் வீடியோ கான்பரன்சிங்கில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...