உடல் பருமன் உடையவர்கள் எடையினை குறைப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்வர். இதற்கு உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை பின்பற்றுவர்.
பெரும்பாலும் உடல் பருமனால் தான் இதய செயலிழப்பு, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையினை குறைப்பவர்களுக்கு இதயநோய் உண்டாவதற்கான வாய்ப்பு குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.
இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் 10கிலோ எடையினைகுறைப்பதால் இவர்களுக்கு இதயம் செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாம்.அறுவை சிகிச்சை மூலம் சராசரியாக 18.5 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம்.
இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 25,805 பேரிடமும், உணவு மூலம் எடையினை குறைத்த 13,701 பேரிடமும் நடத்திய ஆய்வில் அறுவை சிகிச்சை மூலம் எடையினை குறைத்தவர்களில் 46 பேருக்கு இதய செயலிழப்பு ஏற்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.