சுத்தமான தேனை கண்டறிய எளிய வழிமுறை
1)கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.
2)எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.
3) ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.
4) பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்த பின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!
இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்லை என்றால், தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:
1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனை விடவும்.
2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.
3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.
தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம். மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம்!
தேன் மகிமை : உடல் மெலிந்தவர்கள் தேனில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும். அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சுத்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும்.
நரம்புத்தளர்ச்சியும் நீங்கி விடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்த வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடலாம்.
தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும். தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பிக்கலாம். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும்.
ஊளைச்சதை குறையும். உடல் உறுதி அடையும். சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு, எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்தீர்களானால் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் மருந்து ரெடி.
அடிக்கடி சளி பிடித்தால் இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் பருகி வர நல்ல பலன் தெரியும். உடல் மெலிந்தவர்கள் தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல்வாகு சீராகும்.