நாம் பிறந்த நேரத்திற்கு ஏற்ப நமது ஜாதகப்பலன்கள் கூறப்படும். அதே போன்று பெயரின் முதல் எழுத்தை கொண்டும் ஒருவரின் குணநலன்களை கூறலாம்.
அதன்படி A, B மற்றும் C என்ற ஆங்கில எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவரின் குணநலன்களை காணலாம்.
முதல் எழுத்து A
ஆங்கில எழுத்துக்களில் முதல் எழுத்து A. இதனை குறிக்கும் எண் 1 ஆகும். முதல் எழுத்தாக இருப்பதால் அதிக திறன் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்கள் தலைமை பண்பு உடையவர்களாகவும், எந்த இடத்திலும் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பர்.
தனித்தன்மை உடையவராகவும், தவறு செய்தால் அதனை தைரியமாக எதிர் கொள்பவர்களாகவும் இருப்பர்.
A முதல் எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர், ஆசிரியர் போன்ற பதவிகளை வகித்து மற்றவர்களுக்கு வழிகாட்டுபவர்களாகவும், தைரியமானவர்களாகவும் இருப்பர்.
ஆனால் இவர்களிடம் உள்ள ஒரு கெட்ட குணம் மற்றவர்கள் செயலை குறை கூறுவதாகும்.
முதல் எழுத்து B
B-க்குரிய எண் 2 ஆகும். இதனை முதல் எழுத்தாக கொண்டவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், இரட்டை குணம் கொண்டவர்களாகவும் இருப்பர்.
இவர்கள் உறவுகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பர். மற்றவர்களின் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்பவராக இருப்பர்.
அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் அளிப்பர். குடும்பத்தாரிடம் பாசத்துடன் பழகுபவராக இருப்பர்.
ஆனால் சில சமயங்களில் தன்னம்பிக்கையற்றவராக இருப்பது இவர்களிடம் உள்ள ஒரு குறையாகும்.
முதல் எழுத்து C
Cக்குரிய எண் 3ஆகும். இந்த எழுத்தை முதல் எழுத்தாக கொண்டவர்கள் அதிக திறமை கொண்டவர்களாக இருப்பர்.
அதிக உற்சாகத்துடனும் மற்றவர்களால் அதிக விரும்பப்படுபவர்களாகவும் இருப்பர். தன்னிடம் பாசமாக நடந்து கொள்பவர்களிடம் அதே அளவு பாசத்தினை பொலிபவர்களாக இருப்பர்.
இவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் தனித்தன்மை வாய்ந்தவர்களாவும், தங்களின் திறனை வெளிப்படுத்துவராகவும் இருப்பர்.
ஆனால் சில சமயங்களில் இரக்கமில்லாமல் கொடூரமாக நடந்து கொள்வது இவர்களிடம் உள்ள பெரிய குறையாகும்.