இதுவரையில்லாத அளவுக்கு 2017ன் மூன்று மாதங்களில் மட்டும் பல்வேறு நாடுகளிலிருந்து அதிகளவிலான மக்கள் கனடாவுக்கு புலம்பெயர ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.
கனடா அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்தி குறிப்பில், 2017 ஜனவரி 1ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை மொத்த 8960 பேர் வேறு நாட்டிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர உரிமை கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் புலன் பெயர்வதற்கான மனுவை அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (ஐ.ஆர்.சி.சி) அல்லது கனேடிய பார்டர் சர்வீசஸ் ஏஜென்சி (சிபிஎஸ்ஏ) யிடம் சமர்பித்துள்ளனர்.
கடந்த 2015ல் மொத்தமாக இது 16,115 ஆக இருந்த நிலையில் இந்த வருடத்தின் மூன்று மாதங்களில் மட்டும் 8,960 பேர் என்னும் எண்ணிக்கை மிக பெரியதாகும்.
சராசரியாக கடந்த நான்கு வருடங்களில் புலம் பெயர உரிமை கோருபவர்களின் எண்ணிக்கை 15,960 ஆக உள்ளது.
போர்கள், சண்டைகள் அதிகம் நடக்கும் நாடுகளான பாகிஸ்தான், சிரியா, நைஜீரியா போன்ற நாடுகளின் மக்கள் அதிகம் கனடாவுக்கு வர ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சோமாலியா, மெக்சிகோ நாடுகளை விட அமெரிக்காவிலிருந்து அதிக மக்கள் கனடாவுக்கு புலம்பெயர விரும்புகிறார்கள்.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அமெரிக்க பாஸ்போர்டுடன் 85 அமெரிக்கர்கள் கனடாவுக்கு புலம் பெயர உரிமை கோரினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.