தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரத்தினால் காதலியை, காதலனே காரை ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் நிவேதா(47). இவருக்கு ரகு என்ற கணவரும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிவேதாவும் அவரது மகளும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நிவேதாவின் மகளுக்கு சென்னையில் வேலை கிடைத்ததால், அவரது மகள் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் நிவேதா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
அப்போது நிவேதாவுக்கு அருகில் உள்ள இளையராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் தீயணைப்பு துறையில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பழக்கம் நாளைடைவில் காதலகாக மாறியுள்ளது. அதன் பின் இருவரும் பல்வேறு இடங்களுக்கு தனியாக சென்று வந்துள்ளனர்.
இந்த சமயத்தில் நிவேதாவுக்கு சமூகவலைத்தளமான பேஸ்புக் மூலம் சென்னையைச் சேர்ந்த கணபதி(33) என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.
திருமணமான கணபதி, தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் வங்கியில் லோன் பெற்று தருவதாக நிவேதாவிடம் கூறியுள்ளார்.
இருவரும் பேஸ்புக் மூலம் பேசி நட்பை மேலும் வளர்த்துக் கொண்டனர். இருவரும் புகைப்படங்களை பரிமாறிக் கொள்வது, அதற்கு கருத்து தெரிவிப்பது என்று இருந்துள்ளனர்.
இதனால் நிவேதா பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடந்தார். கணபதியுடனான நட்பால் காதலர் இளையராஜாவை மறக்கும் அளவுக்கு சென்று விட்டார்.
இது இளையராஜாவுக்கு தெரிந்ததால், அவர் இது குறித்து நிவேதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின் இருவரும் சென்னையில் உள்ள நிவேதாவின் மகளை பார்ப்பதற்கு சென்றுள்ளனர். அப்போது இளையராஜா, நிவேதாவின் பேஸ்புக் நண்பரான கணபதியை அழைத்தார்.
அங்கு வந்து பேசிய கணபதி நிவேதாவிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு இளையராஜாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இருவரும் பேசிவிட்டு சமாதானமாக சென்றுவிட்டனர். இருந்த போதிலும் இளையராஜாவுக்கு ஆத்திரம் தீரவில்லை, அதன் காரணாமாக தான் ஓட்டி வந்த காரை வேகமாக ஓட்டி இருவர் மீதும் மோதியுள்ளார்.
இதில் நிவேதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணபதி உயிர்தப்பினார்.
இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் இளையராஜாவை கைது செய்தனர்.
அவர் பொலிசாரிடம் கூறுகையில், நிவேதாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தேன். அவருடன் நட்பாக பழகினேன். கணபதியுடன் பழக்கம் ஏற்பட்டது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. என்னிடம் பழகிவிட்டு அவனுடனும் பழகியதால் நிவேதாவை காரை ஏற்றி கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.