Loading...
சவுதியில் இருக்கும் மனகனுக்கும், இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள இளம் பெண்ணுக்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் நடைபெற்றிருக்கும் சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஷ்மான்.
Loading...
இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவர் அங்கு பணியாற்றி வந்த போது முகமது அபித் என்பவருடன் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. அப்போது இவர்களது திருமணம் கடந்த 5-ஆம் திகதி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் விசா உள்ளிட்ட காரணங்களால் மணமகன் அதாவது ரஷ்மான் திருமணத்தன்று வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருமணத்தை தள்ளிப்போட விரும்பாத இருவீட்டாரும் ஆலோசித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். மணமகனும், மணமகளும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனால் நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் நடைபெற்றது. இருவீட்டாரின் உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர். வெளிநாட்டில் உள்ள மணமகனை வீடியோ கான்பரன்ஸ் மூலம் இளம்பெண் திருமணம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading...